கொல்கத்தாவின் சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். “மிஷ்டர் ஆர்பியெஷ்” என்ற இன்முகத்துடன் வரவேற்ற டாக்ஸி ட்ரைவரின் காரேறித் திரும்பும் போது கண்ணில் பட்ட காம்பௌண்ட் சுவரின் காலில் பட்டை பட்டையாய் சிகப்பு வர்ணம். பான் ராஜாங்கத்துக்குள் நாம் நுழைவதை உணர்த்தும்விதமாக, மாடர்ன் ஆர்ட் போல கலைநயமாகத் துப்பியிருந்தார்கள். கிழக்கிந்திய கம்பனியார் வாணிபம் செய்ய வந்திறங்கிய இடம்.
↧