ஊர் சோம்பலாக விடிந்திருக்கிறது. ஆறு நாட்கள் பயணப்பட்டுப் பணி செய்து மேனி களைத்தவர்கள் சற்றுக் கூடுதல் ஓய்வாகப் படுக்கையில் சுருண்டிருக்கும் ஞாயிறின் முன்காலைப் பொழுது.
நானும் சின்னவளும் இருசக்கர வாகனத்தில் தலைகோதும் இளங்காற்றில் போய்க்கொண்டிருந்தோம். சவாரி இல்லாத ஆட்டோ ஊர்ந்து செல்லும் பத்து கி.மீ வேகத்தில் எங்கள் ஸ்கூட்டி சாலைக்கு வலிக்காமல் ஊர்ந்துகொண்டிருந்தது. மகளுடன் அப்படிச் செல்வதில்
↧